திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர் காவல்படையினர் ஆகியோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தோல் அலர்ஜி, தேமல், படர்தாமரை, முகப்பரு, பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல் சிறப்பு சிகிச்சை, முகப்பொலிவு சிகிச்சை, கரும்புள்ளி, மச்சம், மரு – அகற்றுதல், வெண்புள்ளி, கால் ஆணி சிகிச்சை, சொரியாசிஸ், பெண்களுக்கான பால்வினை நோய்கள், பொதுநலம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூளை நரம்பியல், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள், மஞ்சள் காமாலை, தைராய்டு, நுரையீரல் போன்ற பல்வேறு பரிசோதனைகள் நடைபெற உள்ளது.