திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் சிட்டி எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் இரவு சுமார் 9.45 மணியளவில் மருத்துவமனையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்பு துறை வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ்கள், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர் . மருத்துவனையில் உள்ளிருந்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வரை அரசு மருத்துவமனையில் 32 நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அதில் 6 நபர்கள் ( 3-ஆண்கள், 2-பெண்கள், 1-குழந்தை) தீ விபத்தில் இறந்ததாக தெரிய வருகிறது. மேலும் 3 நபர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவிலும் 23 நபர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்ற விவரம் தெரிய வருகிறது, மேலும் புனித வளனார் மருத்துவமனையில் 2 நபர்களும் நலம் மருத்துவமனையில் 1 நபரும் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா