கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியில் தர்மபுரி நல்லம்பள்ளியை சேர்ந்த கௌரி என்பவர் கிளினிக் நடத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் டிஃபார்ம் வரை மட்டுமே படித்துள்ளார். அதே போல இவரது கிளினிக்கில் வேலை பார்த்த சிலம்பரசி என்பவரும் 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்