திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் உட்பட பல்வேறு வகை கழிவு பொருட்களை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதனால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில், விசாரணை நடத்தி சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகரன், மாயாண்டி, ஆகியோரை காவல் துறையினர் (19.12.2024) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37), கேரளா மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40). ஆகிய இருவரையும் 21.12.2024 அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்