கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் திரு.மணிகண்டன் அவர்கள் பீகார்-நேபாள எல்லையில் பணியில் இருந்த போது மாடு கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இறந்த வீரரின் உடல் சொந்த ஊரான குருந்தங்கோடு , வீரவிளை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது . இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். மேலும் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் சாஸ்திரி IPS அவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.