விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் ராஜ் . இவர், சிறுது காலம் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில் போலீசார்,
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு , காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சங்கர்ராஜ் உடல் தகவனம் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி