கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மின்சாரம் இன்றி இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையம் பகுதியில் பழைய பெங்களூர் ரோட்டில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் முன்பு உள்ள பழைய ஹவுசிங் போர்டில் சுற்றி உள்ள மரங்கள் சூறைக்காற்றால் சாய்ந்து விழுந்தது, இதனால் கிருஷ்ணகிரி பழைய ஹவுசிங் போர்டில் உள்ள பொதுமக்கள் பாதைகளில் செல்ல வசதியின்றி மின்சாரம்யின்றி பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்பை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பழைய ஹவுசிங் போர்டில் ரோட்டில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி சீர் செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதைகளில், சாலையில் கிடந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்