மதுரை: மக்கள் சேவை இயக்கம் நிறுவனரும், தலைவருமான கா.ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் டாக்டர் ப்ரியா கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக செயலாளர் இளவரசன் இணைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மரக்கன்றுகளும், அழகிய பூ தொட்டிகளும் மருத்துவமனையில் உள்ள ஆர் எம் ஒ முரளிதரன் மற்றும் மருத்துவ பணியாளர் அணி முத்துக்குமார் ஆகியோரிடம் வழங்கினார்கள். உடன் சாகுல், வழக்கறிஞர் சம்பத் குமார், நசீர், மகளிர் அணி ரோஸி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பம்சமாக விதைப்பந்துகள் வழங்கினார்கள். அனைவருக்கும் தேனீர் வழங்கப் பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி