மதுரை : உசிலம்பட்டி அருகே எழுமலையில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பில், மதுரை வனக்கோட்டம் மற்றும் ஸ்வாட் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் அறிவியலை எவ்வாறு பயன்படுத்துவது என்று பேசினார்.
மேலும், மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவத்தையும், இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் பொருளாதாரப் பேராசிரியர் ராமசாமி, சோழவந்தான் வனச்சரக வன அலுவலர் வெங்கடேஸ்வரன், உசிலம்பட்டி வனச்சரக வனவர் வீமராஜ் மாற்றும் ஸ்வாட் தொண்டு நிறுவனர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில், விவேகானந்தா நடுநிலைப் பள்ளியின் செயலர் சிவானந்தா, திருவள்ளுவர் கல்விக்குழுமாம் தலைவர் பெருமாள், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வனக் காவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு எழுமலை பேரூராட்சியின் முக்கியச் சாலைகளில் மா, பலா, நாவல், இலுப்பை, புங்கை, வேம்பு என 500 மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி