திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (25), இவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறத? இந்த நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துராமலிங்கம் விஷம் கொடுத்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா