திண்டுக்கல் : பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகர் பகுதியை சேர்ந்த துரையன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக மனைவி மாலதி என்பவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தாலுகா காவல்துறை விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இறந்த மாலதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா