தேனி: தேனியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஈஸ்வரன் (27), இவரது மனைவி உசிலம்பட்டி சேர்ந்த கிரிஜா பாண்டி(24) குடும்பத்தகராறு காரணமாக ஈஸ்வரன் தனது மனைவியை கடந்த 2019ஆம் ஆண்டு கொலை செய்து அரண்மனைப்புதூர் அருகே முல்லைபெரிற்றில் சாக்கு மூட்டையில் கட்டி வீசி தலைமறைவானார்.
கிரிஜா பாண்டி தந்தை செல்வம் கொடுத்த புகாரில் விசாரணை செய்த தேனி தனிப்படை போலீஸார் ஈஸ்வரனை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவரது சகோதரரும் பழனியில் காவல்துறை சிறப்பு பிரிவு காவலராக உள்ள சின்னஈஸ்வரன் (25), தாயார் செல்வி (55 ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.