திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர், தெற்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி(43). ஜெயலட்சுமி(34/22). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக (10.01.2022) அன்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்து போது, அங்கு வந்த சுடலையாண்டி அவரை கொலை செய்துள்ளார்.
இது குறித்து பழவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (25.02.2025)-அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுடலையாண்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த பழவூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்