தேனி: போடி பகுதியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, போடி டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடியில் பதுக்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரனையில், போடி கீழரதவீதியை சேர்ந்த முருகேசன்(66), மற்றும் இவரது மனைவி முருகேஸ்வரி (60), என்பது, தெரியவந்ததையடுத்து போடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். சரஸ்வதியை தேடி வருகின்றனர்.