திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆயூப்கான்புரம், குத்தாலபேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (48). மல்லிகா (40). தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை காரணமாக மல்லிகா தனது தந்தை வீட்டில் வருகிறார். (07.10.2024) அன்று விடுமுறை முடிந்து மல்லிகா தன் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த போது அங்கு வந்த முத்துராஜ் மல்லிகாவை அவதூறாக பேசி, மண் வெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து மல்லிகா மானூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் வழக்கு பதிவு செய்து முத்துராஜை (08.10.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்