திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னகண்ணு (55). என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி, பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தென்னரசு அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.பாலசுந்தரம் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (24.06.2024)-ம் தேதி விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சின்னகண்ணு என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 வருடம் சிறை தண்டனை மற்றும்ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.