கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் வசித்து வந்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்-சசிகலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கர் வேறோரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாஸ்கர் மனைவியை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலுறவின் போது இறந்ததாக நாடகமாடியுள்ளார். சிப்காட் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்