திண்டுக்கல்: திண்டுக்கல், குடைபாறைப்பட்டி அருகே பிஸ்மி நகரில் முகமதாபீவி(60). என்பவர் வீட்டிற்குள் படுத்து இருந்தபோது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் முகமதாபீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இது குறித்து எஸ்.பி.பிரதிப் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முகமதாபீவியின் கணவர் ஜெய்னுலாப்தீன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா