இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் ஜெர்மின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் சாயல்குடி காவல் ஆய்வாளர் தலைமையில், தீவிர விசாரணை மேற்கொண்டு இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜெர்மினின் கணவர் விஜயகோபால், அசோக் (எ) ஆனந்த், காளிராஜ் (எ) கட்டகாளி, மாரியப்பன் மற்றும் வயனக்கன் ஆகிய 5 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இக்கொலை வழக்கில் 5 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.