திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தளவாய்புரம், கீழத்தெருவை சேர்ந்த முத்துராஜ், (47). புனித மேரி (41). தம்பதியினர். வரதட்சணை பிரச்சனையால் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக புனித மேரி, கணவர் முத்துராஜ் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முத்துராஜ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (19.02.2025)-அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் முத்துராஜுக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000/-அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்