திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆவரைகுளம், பாக்கியவிளை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (44). கவிதா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கவிதா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் (20.04.2025) அன்று முத்துக்குமார் கவிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களை தீயிட்டு சேதப்படுத்தியும், கவிதாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார். இது குறித்து கவிதா பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பணகுடி வட்டக் காவல் ஆய்வாளர், ராஜாராம் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை (21.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்