தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.S.உமாதேவி அவர்கள் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும்படி வரப்பெற்ற மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உரிய விசாரணை செய்து, காணாமல் போனவர்களை மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட காவல்துறையினர் தனி கவனம் செலுத்தி எடுத்துவரும் இச்செயல் தங்களுக்கு தேனி மாவட்ட காவல்துறையின் மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.