சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில்குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 43 காவல் நிலையங்களிலும் இன்று 5.8.2021 பொது மக்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும் பொருட்டு நிலுவையில் இருந்த மனுக்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
சிவகங்கை தாலுகா காவல் நிலையம், காளையார்கோவில் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக சென்று மனு விசாரணை நடைபெறுவதை மேற்பார்வையிடும், மனுவிற்கு தீர்வு கண்டுள்ளார்.
இன்று மட்டும் ஒரே நாளில் 251 மனுக்கள் விசாரிக்கப்பட்டு இச்சிறப்பு முகாமில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு நிலுவையிலிருந்த புகார் மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.