மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நடக்க முடியாமல் சாலையோரம் மயங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் மேலூர் டி.எஸ்.பி திரு.சுபாஷ் அவர்களிடம் அளித்த தகவலின் பேரில் அவரது உத்தரவில் அங்கு வந்த காவலர் செந்தில்குமார் மற்றும் பிற காவலர்கள் இளைஞன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.. அந்த இளைஞன் திருமங்கலத்திலிருந்து உபி நோக்கி தனி ஒருவனாக நடந்து சாலையில் வந்ததும் பசியால் மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. பின்னர் உடனடியாக அளித்த தகவலின் பேரில், இளைஞன் பெயர் இங்குமிஷ்ரா என்பதும், திருமங்கலத்தில் பானிபூரி கடையில் வேலைபார்த்தாகவும் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்து நடத்து வந்ததும் பசியால் நடக்க முடியாமலும் சட்டைபையில் வெறும் 50 ரூபாய் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் மேலூர் போலீசார் அங்கிருந்த பேக்கரியில் உடனடியாக சிற்றுண்டி வாங்கி கொடுத்து பசியாற்றினர்.. மேலும் அந்த இளைஞரை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக அழைத்து சென்றனர்.. சாலையோரம் தவித்த வடமாநில கூலிதொழிலாளியை போலீசார் மீட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது…