மதுரை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பரத் கவுசிகன், மாவட்ட செயலாளர் இளவரசன் துணைச் செயலாளர்கள் குருசாமி, பாபு ராஜ், காசி மாயன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டல மாநிலத் துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் முத்து மாரியப்பன் பாண்டியராஜன் சக்திவேல் பூமி ராஜன் விஜயராம் பொன்னம்பலம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு பணியாளர்கள் சார்பாக ரங்கசாமி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி