திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., தலைமையில் (10.12.2025) அன்று மனித உரிமைகள் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு ஏற்கப்பட்டது. “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்றும் நான் உளமாற உறுதி மொழிகிறேன். எந்தவித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன், எண்ணுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















