சென்னை : சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது, எதிர்பாரா விதமாக, ஏழுமலை மயக்க நிலைக்குப் போனார். அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல், பேருந்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார். ஏழுமலை சபாஷ் !அதே நேரத்தில், அந்தப் பகுதி ரோந்துக் காவலில் இருந்த போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் யஹியா,போலீஸ் பேட்ரோல் ஜீப்பில், ஓட்டுநர் ஏழுமலையை ஏற்றிக் கொண்டு சைரனை ஒலிக்க விட்டு, அரசு கே.எம்.சி., மருத்துவமனைக்கு நிமிடத்தில் விரைந்துள்ளார்.”இனி ஆபத்து ஏதும் இல்லை,குறித்த நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள், அருமை !” என்று மருத்துவர்கள், மகிழ்ச்சி தெரிவிக்க பெருமூச்சு விட்டிருக்கிறார் யஹியா.கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, எஸ்.ஐ- யஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, மறுவாழ்வு பெற்றிருக்கிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி