மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஷாசுலி இப்ராஹிம் தலைமை தாங்கினார். மேலும், இக்கருத்தரங்கின் வரவேற்புரையை கல்லூரியின் மனித வள மேம்பாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மும்தாஜ் ஆற்றினார். இக்கருத்தரங்கிற்கு, ஜாமியா இல்மியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, சென்னை மற்றும் ஆரணியை சார்ந்த மௌலானா கலீல் அஹமத் முனீரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தெய்வீக வழியில் போதிப்பது “என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இதில், அவர் நபிகள் கூறிய வழியில் எவ்வாறு போதிப்பது என்பது குறித்த பல்வேறு கருத்துக்களுடனும், மேற்கோள்களுடனும் ஆசிரியர்களுக்கு விளக்கமாக சிறப்புரை ஆற்றினார். இதில், பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியை கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது மேலான சந்தேகங்களையும், கருத்துக்களையும், பரிமாறிக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் நன்றியுறையை, கல்லூரியின் மனித வள மேம்பாட்டுக் கழக உறுப்பினர். பேராசிரியர் செல்வராஜ் ஆற்றினார். மேலும் இக்கருத்தரங்கினை , கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் உறுப்பினரான முனைவர் ஷாஹிதா பர்வீன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதுரை பொருளாதார சபையின் பொருளாளர் முகமது கான் மற்றும் மதுரை பொருளாதார சபையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஜமான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை சிறப்பித்தார்கள். இக்கருத்தரங்கினை, முனைவர்.ஷாஹிதா பர்வீன், முனைவர் கவிதா, முனைவர் சமீம் மற்றும் முனைவர் புவனேஸ்வரி ஆகியோர்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி