மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் அழகுமீனாவுக்கு வியர்வை புண் தவிர்க்கும் பொருட்டு தானியங்கி காற்று படுக்கை விரிப்பு தேவைப்படுவதாக தகவல் கிடைத்தது. தேவை அறிந்து உதவி என்ற அடிப்படையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நேரில் வந்து வழங்கினோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில்,
சமூக ஆர்வலர்கள் பாலமுருகன் மற்றும் ரமேஷ் குமார் களப்பணியில் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி