திருவள்ளூர்: மதுவுக்கு அடிமையாகி நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மதுப்பழக்கம் காரணமாக பல இடங்களில் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மது வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மது வணிகம் என்னும் மரண வியாபாரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுவினால் ஏற்படும் தீமைகளையும் சாமானிய மக்கள் சந்திக்கும் பாதிப்புகளையும் அப்போது எடுத்துரைத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மது விற்பனையை தடை செய்ய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு