தேனி: தேனி மாவட்டம் (03.06.2021) அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் ரோந்துப் பணி சென்றபோது சாலையோரத்தில் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை பார்த்தவுடன் முடிதிருத்தும் நபரை அழைத்து மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் இருந்த நபருக்கு முடி திருத்தி, முக சவரம் செய்து, முகக் கவசம் வழங்கி அவரை அணியச்செய்தார்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற* செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப, காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயலுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.