மதுரை : தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆணைப்படியும், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்,முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும் வாடிப்பட்டி வட்ட சட்ட பணிகள் குழுத்தலைவர் நீதிபதி ராம் கிஷோர் தலைமையில் உலக மனநலம் நாளினை முன்னிட்டு நாக தீர்த்ததில் உள்ள அட்சயா மனநலம் காப்பகத்தில் உணவு, மற்றும் பராமரிப்பு,மருத்துவ வசதிகளை ஆய்வு செய்து உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முறைகள் பற்றி சட்ட விழிப்புணர்வு வழங்கினார். காப்பக
ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி வரவேற்றார். இந்த விழிப்புணர்வு முகாமில்,
வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர்கள் செல்வகுமார், ராமசாமி, அழகர்சாமி, சீனிவாசன் , சுமிதா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில்,
சட்ட தன்னார்வலர் கவிதா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி