விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல்துறை, 90 நாட்களுக்குள் POCSO வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சாத்தூர் உட்கோட்டம், மேட்டமலையைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரின் மகன் மணிகண்டன் (32) என்பவர் கடந்த (27.02.2023)-ம் தேதி மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. பொன்னி, இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசபெருமாள் அவர்களின் அறிவுறுத்தலின்படி சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. தேவமாதா அவர்கள், புலன்விசாரணை மேற்கொண்டு திருவில்லிபுத்தூர் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 42 நாட்களில் விசாரணை மேற்கொண்டு குற்ற இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்ற விசாரணையின்போது குறுகிய காலத்தில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தியும், வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு தக்க உதவிகளை வழங்கியும் வழக்கை தண்டனையில் முடிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவ்வழக்கில் திருவில்லிபுத்தூர் POCSO சிறப்பு நீதிமன்றம் இன்று (01.06.2023) மேற்படி மணிகண்டனை குற்றவாளியாக அறிவித்து 20 ஆண்டுகள் கடுங்காவல் வழங்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 47 POCSO வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்