இராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” என்ற விருதினை வழங்கி வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதவற்றவர்களின் பிரேதங்களை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்து வரும் திரு.அமீர் அம்சா அவர்களின் பெயரினை, இவ்விருது பெற பரிந்துரை செய்து, அவரின் மகத்தான சேவை தொடர வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திரு.அமீர் அம்சா அவர்களுக்கு மத நல்லிணக்கத்திற்கான தங்கப்பதக்கத்தையும் ரூபாய் 5,00,000/- காசோலையும் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி