கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், தேர்தல் பணிகள் முழுமையாக சீராக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் காவல்துறையினரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.















