திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர்கள் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டி இன்று இரயில் மறியல் போராட்டம் செய்ய இருந்த நிலையில் அவர்கள் தடுக்கப்பட்டு மீஞ்சூர் பஜார் வீதியில் சாலை மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையின் அமர்ந்து போராட்டம் செய்தவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு எதிரான விதை நெல் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாள் என்று மாற்றி மகாத்மா காந்தியின் பெயரில் செயல்பட்டு வந்த அந்த திட்டத்தை ராம்ஜி ராம் என்று மாற்றியது உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கும் விதமாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















