மதுரை : மதுரை திருநகரில் மோடி அரசின், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து,சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.சி ஐ டி யு சார்பாக ஹார்விபட்டியில் இருந்து சி ஐ டி யு மாவட்டத்
துணைச்செயலாளர் எஸ். எம். பாண்டி , காளிதாஸ் தலைமையில் 150 பேர் பேரணியாக வந்து திருநகர் யூனியன் வங்கியின் முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர். இதில்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே. தொழிலாளருக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்பை திரும்ப பெறு .
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கிடைக்க சட்டம் இயற்றவும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை இருநூறு நாட்களாக உயர்த்துகிற கூலி ரூபாய் 600 வழங்கிடு. மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடு என, கோஷமிட்டு வங்கி முன்பாக வைக்கப்பட்ட தடுப்புகளை தள்ளிவிட்டு உள்ளே வந்தபோது, திருநகர் போலீசார் அவர்களை,தடுத்து நிறுத்தினார். அவர்களை மீறி வங்கி முன்பாக உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். 20 நிமிடம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, பின்பு அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி திருநகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி