நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த 10ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த 295 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.