விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில், கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்ராஜா தலைமையில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புதுத்தெரு, சுப்பிரமணியபுரம் காலனி, பள்ளபட்டி, மீனாட்சி காலனி உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். போலீசார் சோதனையின் போது, உரிய அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்ட கல்லறை தெரு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (33). சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்த லிங்கசாமி (60). சேகர் (58). பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் (51). ஆறுமுகச்சாமி (52). கங்காகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (51). மீனாட்சி காலனியைச் சேர்ந்த சக்திவேல் (42).நாரணாபுரம் நாச்சியார் மடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32). இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (29). புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (51). ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 76 மது பாட்டில்களையும், 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி