திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் (02.10.2024) ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பேட்டையை சேர்ந்த சண்முகவேல்(67). மற்றும் ரமேஷ்(34). ஆகியோரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி நகர் விளக்கு பகுதியில் கங்கை கொண்டானை சேர்ந்த செல்வநாயகம்(50). என்பவரிடமிருந்து 26 பாட்டில்கள் என மொத்தம் 56 பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்