திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் மற்றும் காவல் துறையினர் (12.03.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாளை மார்க்கெட் வேன் ஸ்டாண்டு அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளை, நாயனார் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிபாஸ்கர்(23). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்