திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கார்த்திக் குமார் மற்றும் போலீசார் (08.12.2024) அன்று ரோந்து சென்ற போது ஆச்சிமடம் டாஸ்மாக் பாருக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வல்லநாட்டை சேர்ந்த ராஜேந்திரன் (54), முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (41). ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பொன் செல்வன் (44). ஆகிய மூன்று நபர்களிடமிருந்து 47 பாட்டில்களும் காவல் உதவி ஆய்வாளர், வள்ளியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது தியாகராஜ் நகர் ரயில்வே கேட் பகுதியில் பாளையங்கோட்டை இலந்தைக்குளத்தை சேர்ந்த உலகநாதன் மகன் பெருமாள் (36). என்பவரிடமிருந்து 27 பாட்டில்கள் மற்றும் ரூபாய் 880/-ம், காவல் உதவி ஆய்வாளர், அப்துல் ஹமீது மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது மகிழ்ச்சி நகர் ருசி ஹோட்டல் அருகில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன் (50). என்பவரிடமிருந்து 33 பாட்டில்கள் ரூபாய் 1550/-ம், பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதிசங்கர் மற்றும் போலீசார் சென்ற போது பாளை மார்க்கெட் வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளை நல்லக்கண்ணு கார்த்திக் (32). மற்றும் பாளை மூளிக்குளத்தை சேர்ந்த முருகன் மகன் பாஸ்கர் (23). ஆகியோரிடமிருந்து 54 பாட்டில்களும், என மொத்தம் 161 பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 2430/- ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, மேற்கண்ட 7 நபர்களை கைது செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்