திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (03.12.2024)- அன்று தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரகுமார், மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரை, சேர்ந்த ராஜன் (37). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 121 மது பாட்டில்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்