திருச்சி : மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி பகுதியில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, குற்றச்சாட்டுக்குள்ளான மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், குற்றவாளிகளிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 76 மது பாட்டில்கள், மது விற்பனையில் ஈடுபட்ட பணம், மற்றும் PAYtm Machine ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க, கள்ளச்சந்தை மதுபான விற்பனைக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
















