திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுடர்வேல் வேந்தன் மகன் பிரீத்தம் (26). மற்றும் அவரது நண்பரான டவுன் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முத்துப்பாண்டி (38). ஆகிய இருவரும் (02.04.2025) அன்று ஒன்றாக மது அருந்தியபோது மது போதையில் பிரீத்தம் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 40.700 கிராம் தங்கச் சங்கிலியை முத்துப்பாண்டி பறித்து சென்றுவிட்டார்.
இது குறித்து முத்துப்பாண்டியிடம் பலமுறை கேட்டும் தங்கச் சங்கிலியை திருப்பி தராததால் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பிரீத்தம் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்