மதுரை: மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல பெருமாள் பட்டி கிராமத்தில் வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டின் பின்புறம் சோதனையிட்டபோது சுமார் 526 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து, மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த மாயக்கால் என்பவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி