திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரெங்கசாமி மற்றும் போலீசார் வன்னிக்கோனேந்தல் டாஸ்மாக் கடை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வன்னிக்கோனேந்தலை சேர்ந்த மகேந்திர ராஜாவிடம் (32) .போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூடுதல் விற்பனைக்காக 25 மது பாட்டில்களை அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகேந்திர ராஜவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 25 மது பாட்டில்கள், ரூ.200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்