தேனி: தேனி- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேனி- கோடாங்கிபட்டி சாலையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
பல மாவட்டங்களில் இருந்து, தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், செல்கிறது. இதில் அதிகளவில் கள்ள மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை நடக்கிறது.
இதனை மது விலக்கு, போலீசார் வாகனங்களில், சோதனை செய்வதன் மூலம், தடுக்க முடியும். 24 மணிநேரமும், அனைத்து வாகனங்களும், சோதனை செய்வதன் மூலம் கள்ள மதுபாட்டில்கள் விற்பனை தடுக்க முடியும் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.