தர்மபுரி: தமிழகத்தில் மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவிலான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநிலத்தின் சிறந்த காவல் நிலையமாக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து அரூர் காவல் நிலையம் முன்மொழியபட்டுள்ளது. இந்நிலையில் மதுவிலக்கு பிரிவு ஐஜி மயில்வாகனன் அவர்கள் அரூர் காவல் நிலையத்தில் (31.08.2024) அன்று ஆய்வு செய்தார். வழக்கு விவரங்கள் நிலுவை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் காவல் நிலைய செயல்பாடுகள் மற்றும் அமைப்பு குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மதுவிலக்கு பிரிவு ஐஜி மயில்வாகனன் அவர்களை தர்மபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ் எஸ் மகேஸ்வரன் அவர்கள் வரவேற்றார். ஆய்வின் போது அரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், காவல் ஆய்வாளர் செந்தில் ராஜமோகன், உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.