கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்கள், ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனைச் சாவடி மற்றும் கும்தாமேடு மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் அதிவிரைவு வீரர்கள் சகிதம் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டார். ஆய்வின்போது, வாகன தணிக்கை நடைமுறைகள், மதுபான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
















